சார்லஸ் சாப்ளின் பிறந்த தினம்

சார்லஸ் சாப்ளின் பிறந்த தினம்

‌‌🌟 உலகுக்கே நம்பிக்கையையும் நகைச்சுவை வழியாக தந்த சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin) 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் பிறந்தார்.

🌟 1912ஆம் ஆண்டு லண்டன் நகரில் உள்ள நாடகக் குழு மூலமாக சென்ற அமெரிக்கப் பயணம் இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.

🌟 பிறகு இவரை கீ ஸ்டோன் சினிமா நிறுவனத் தயாரிப்பாளர் தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். இவர் நடித்த முதல் மௌனத் திரைப்படம் மேக்கிங் ஏ லிவிங் 1914ஆம் ஆண்டு வெளிவந்தது.

🌟 ஒரே வருடத்தில் 35 திரைப்படங்களில் நடித்தார். அனைத்துமே சாதனை படைத்தன. 1936ஆம் ஆண்டு பேசும் படக்காலம் தொடங்கியது. மாடர்ன் டைம்ஸ் என்ற பேசும் படம் தயாரித்தார். இதில் இவர் பேசாமல்தான் நடித்தார்.

🌟 இரண்டு முறை ஆஸ்கர் சிறப்பு விருதுகளை வென்றுள்ளார். உலகையே சிரிக்க வைத்த இவர் 88வது வயதில் (1977) மறைந்தார்.


Share Tweet Send
0 Comments
Loading...