அடவிநயினார் அணை

அடவிநயினார் அணை

அடவிநயினார் அணைக்கட்டு பகுதி திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை தாலுகா மேக்கரை கிராமத்தில் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.குற்றாலம் மற்றும் அச்சன்கோவில் பகுதிக்கு அருகில் அடவிநயினார் அணைகட்டு அமைந்துள்ளது.பருவகாலங்களில் குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் இந்த அணைக்கட்டு பகுதிக்கு வருகை புரிகின்றனர்.இந்த அணைக்கட்டு பகுதியில் சிறிய அருவி ஒன்று உள்ளது.

செங்கோட்டை தாலுகா மேக்கரையில் 92 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் மழையின் காரணமாக எராளமான சேதங்கள், நிலச்சரிவு, உயிர் பலிகள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மேக்கரையில் தமிழக அரசு 132 அடி உயரத்தில் பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், வாவாநகரம், இடைகால், ஆய்க்குடி, சுந்தர பாண்டியபுரம், உள்ளிட்ட 10 ஊர்கள் நேரடியாகவும், மறைமுகமாக சில ஊர்களும் அப்பகுதியில் உள்ள மொத்தம் 15.ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெரும் விதம் அடவிநைனார் கோவில் அணையை கட்ட திட்டமிட்டு 1994 ஆம் ஆண்டு அதற்கான பணிகளையும் தொடங்கியது. 2002 ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப் பட்டது.

சுற்றுலா தளம்

சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இங்கு சாலை, சிறுவர் பூங்கா, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன . குற்றாலப் பருவ நேரத்தில் தமிழக சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி கேரளா உட்பட பிற மாநில சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருவர்.


Share Tweet Send
0 Comments
Loading...