அசாத்திய பயன்கள் கொண்ட அதிமதுரம்

அசாத்திய பயன்கள் கொண்ட அதிமதுரம்

தற்காலங்களில் உலகெங்கிலும் புதிது புதிதாக நோய்கள் உருவாகி வருகிறது. சித்த மருத்துவம், ஆயர்வேதம் போன்ற முறைகளை நாடி மேலை நாட்டவர்களே நம் நாட்டிற்கு வரும் போது, நமது மக்கள் ரசாயனங்கள் மிகுந்த ஆங்கில மருந்துகளை நாடுகின்றனர். நமது இந்திய நாடு “மூலிகைகளின் சுரங்கம்” என்று சொன்னால் அது மிகையாகாது. நமது நாட்டில் வளரும் உயிரை காக்கும் மூலிகைகளில் ஒன்று தான் “அதிமதுரம்”. அதிரமதுரத்தின் பல்வேறு மருத்துவ பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

அதிமதுரம் பயன்கள்

வயிறு:

பலரும் சரியாக காலை உணவுகளை சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். அதிமதுரப்பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும். வயிற்றில் ஏற்படும் பிற பிரச்சனைகளுக்கு அதிமதுரத்தை பொடி பதத்தில் சாப்பிடுவது தான் சிறந்த பலனை தரும்.

மூட்டுவலி

பிரச்சனைகள் வாதம் என்பது உடலின் காற்றின் தன்மை அதிகரிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளிலிருக்கும் மூட்டு பகுதிகளில் வலி உண்டாவதோடு விறைப்புத்தன்மை ஏற்படுகிறது. அதிமதுர தூள் கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும்.

சிறுநீரகங்கள்

உடலில் சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு சிறுநீரக தொற்று நோய்களால் சிறுநீர்ப்பைகளில் புண்கள் ஏற்படுகிறது. அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.

தொண்டை

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும்.

இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

தலைமுடி

அதிமதுரத்தைத் (licorice powder) தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலை முடி வேர்களில் நன்றாக அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமுடி பிரச்சனைகள் நீங்கும்.

தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். தலை முடி பட்டு போல் மினுமினுப்பாக இருக்கும், மேலும் அகால நரையும் நீங்கும்.

மலட்டு தன்மை

ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலர்களின் மலட்டுத்தன்மை நீக்குவதற்கு அதிமதுரத்தை நன்றாக பொடித்து பசுப்பாலில் போட்டு கலக்கி, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு நரம்புகள் வலிமைபெறும், தாது புஷ்டி உண்டாகும். பெண்களின் கருப்பையில் இருக்கும் குறைகளை போக்கி சீக்கிரத்தில் கருவுற செய்யும்.

கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன் ஏற்படும் உதிரப் போக்கு பிரச்சனைகளுக்கு அதிமதுரம் (licorice benefits) ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

எனவே கருவுற்ற பெண்கள் அதிமதுரம் (licorice powder) மற்றும் சீரகம் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் பொடியை 100 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நீங்கும்.

மலச்சிக்கல்

பலருக்கும் காலை நேரத்தில் மலச்சிக்கல் காரணமாக மலம் சரியாக கழிக்க முடியாமல் பிரச்சனை ஏற்படுகிறது. இதை போக்க அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றை சம அளவில் எடுத்து, நன்கு இடித்து சலித்து வைத்து கொண்டு இரவு தூங்கும் முன்பு ஒரு சிட்டிகை அளவு பசுப்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சுலபத்தில் நீங்கும்.

கல்லீரல்

அதிமதுரம் சற்று திராவகத்தன்மை வாய்ந்த மருத்துவ மூலிகை என்பதால் அதில் கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தி அதிகம் உள்ளது. அதிமதுரத்தை அவ்வப்போது சிறிதளவு சாப்பிட்டு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம் பெரும். உடலில் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மைகளை நீக்கும். ரத்தத்தில் நோயெதிர்ப்பு தன்மையை மேம்படுத்தும்.

கண் எரிச்சல்

அதிமதுரம் (licorice powder), கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும், கண் ஒளி பெறும்.

இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவைகளை குணமாக்குகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...