அஸ்வகந்தா

அஸ்வகந்தா

"மூலிகைகளின் அரசன்" என்றே இதனை சித்தர்கள் கூறுகின்றனர். அவ்வளவு மகத்துவங்களை இது தனக்குள்ளே மறைத்து வைத்துள்ளது.

1. மூலிகையின் பெயர் :- அஸ்வகந்தா.
2. தாவரப்பெயர் :- WITHANIA SOMNIFERA DUNAL.(வித்தானியா சோம்னிபெரா டுனால்)
3.  தாவரக் குடும்பம் :- SOLANACEAE.
4. வேறு பெயர்கள் :- அசுவம், அசுவகந்தி, அசுவகந்தம், அசுவகந்தா, அமுக்குரா, அமுக்கூரம், அமுக்குரவு, இருளிசெவி, இடிச்செவி, வராககர்னி, நகுடவேர் போன்றவை ஆகும் .
5. வகைகள் :- நாட்டு அமுக்கூரம், சீமை அமுக்கூரம், ஜவகர் அஸ்காந்த்-20

ஆண்மைபெருக்கம் உண்டாக:


பெயரிலேயே இதன் வீரியம் குறிப்பிடப்பட்டுள்ளது அஸ்வம் என்றால் வேகம், சக்தி, பலம், திடம் போன்றவற்றை குறைக்கும். விறைப்பு பிரச்சனையை போக்குவதிலும் உறவில் நீண்ட நேரம் சோர்வின்றி ஈடுபடவும் உரிய வேகத்தை தருகிறது. விந்தணுக்கள் தரமாக இருக்கவும். எண்ணிக்கை அதிகரிக்கவும் கூட இவை உதவுவதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் இயற்கையாகவே தருவதால் இதை சக்தி வாய்ந்த வயாகரா என்று அழைக்கிறார்கள். இல்லறத்தில் ஈடுபட தடையாக இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் நீக்கிவிடுகிறது.

பூனைகாலி விதை 100கிராம், சீமை அமுக்குரா வேர் 100கிராம் இவற்றை இடித்து பொடியாக்கி, 2 கரண்டி வீதம் தினம் இருவேளை பசும்பாலில் உண்டுவர ஆண்மை பெருக்கம் உண்டாகும்.

நுரையீரல் நோய்க்கு மருந்து:


இதன் இலைகள் கசப்பானவை, வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிரானவை. காய்ச்சல் போக்குவி, வேர் மற்றும் இலைகள் இணைந்து நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகின்றன. கசக்கிய இலைகளும் அரைத்த வேரும் மேல்பூச்சாக சொறி, வலியுடைய வீக்கங்கள், மற்றும் புண்கள் மீது பூசப்படுகிறது.

நரம்பு தளர்ச்சிக்கு:


சீமை அமுக்கூரம் வேர் நன்கு இடித்து தூளாக்கி கொள்ளவும். இதனை 2 கரண்டி (5கி) வீதம் இரவில் ஆகாரத்திற்கு பிறகு பசும்பாலில் உண்ண நல்ல தூக்கம் வரும். மேற்படி அளவு மருந்தை காலை, மாலை பசும்பாலில் தொடர்ந்து உண்டுவர கைகால் நடுக்கம், இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி மாறும். நரம்பு வலிமை நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை, மாலை சாப்பிட்டு விட்டு, அரை அல்லது ஓர் ஆழாக்கு பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி குறையும்.

மூப்பைக் குறைக்கும்

மூப்பைக் குறைக்கும் மிகச் சிறந்த மூலிகையான அஸ்வகந்தா சத்துக்களை மேம் படுத்துகிறது. அதிகப் பணி மற்றும் அதிக அழுத்தத்தால் அவதியுறுபவர்களுக்கு இது மிக முக்கியமானது. அரை ஸ்பூன் அஸ்வந்தாவை பாலில் வேக வைத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து பருகுங்கள். ஆயுர்வேத மூலிகைகள்  (நெய், வெண்ணை, அல்லது காய்ச்சாத முழுமையான பால்போன்ற) சத்தான கொழுப்புள்ள பொருட்களுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது ஆழமாக செல்களுக்குள் செல்கின்றன.

நினைவாற்றலை அதிகரிக்கும் வேர் :

அசுவகந்தாவின் வேர் வலுவேற்றுவியாக செயல்படுகிறது. இது இருமல், விக்கல், மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்த வல்லது. ஞாபக சக்தியினை ஊக்குவித்து மறதியை போக்கும். மூப்பு பலவீனத்தை போக்கும்.

இதன் கசாயத்தில் பால் அல்லது நெய் சேர்த்து கொதிக்க வைத்த தயாரிப்பு ஊட்டத்தினை அதிகரிக்கும். முதுகுவலி மற்றும் மூட்டுவலிகளுக்கு மருந்தாகிறது. வேரின் மருந்து உடல் உறுப்புகளின் செயலியல் மாற்றங்களைச் சரிப்படுத்துகிறது. இவை பால் உணர்வு ஊக்குவி, தாய்ப்பால் சுரப்பு ஊக்குவி, மூளை செயல்பாட்டினைத் தூண்டுகிறது. நரம்பு மண்டலத்தினை வலுப்படுத்தும், விந்து எண்ணிக்கையினை அதிகரிக்கும். வேரின் பொடி சம அளவு நெய் மற்றும் தேனுடன் உட்கொண்டால் மலட்டுத்தன்மை அல்லது விந்து பலவீனத்தை நீக்கும்.

மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியான உறக்கத்துக்கு உதவும் அஸ்வகந்தா!

அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதிலுள்ள அடோப்டோஜினிக் மற்றும் ஊட்டச்சத்து சார் பண்புகள் மனச்சோர்வை குறைக்கிறது. இதனால் நம் மன அழுத்தமானது குறைந்து நிம்மதியான உறக்கத்தையும் தருகிறது


தைராய்டு குணப்படுத்துகிறது

தைராக்ஸின் T4 டிரைஅயடோதைரோனின் T3 என்னும் இரண்டு ஹார்மோன்கள் சுரக்கிறது. இதறு அயோடின் தேவை. தைராக்ஸின் ஹார்மோன் குறைவாக சுரப்பதை ஹைப்போதைராய்டு என்கிறோம். இந்த தைராக்ஸின் அளவை அமுக்கிரான் கிழங்கு அதிகரிப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. எனினும் இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

நீரிழிவு நோய்:

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பி அதிகரிக்க, இந்த அஸ்வகந்தா கிழங்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

​இதயத்துக்கு பாதுகாப்பு

உடல் ஆரோக்கியமாக இயங்க பிரதானமே இதயம் தான். இதயம் சிறப்பாக செயல்பட உயிர் தரும் அமைப்புகளும், கழிவுகளை அகற்றும் அமைப்புகளும் சீராக செயல்பட வேண்டும். இதய தசையில் இறுக்கத்தை குறைக்கவும், தசைகளை உறுதிபடுத்தவும் இது உதவுகிறது.

தினம் ஒரு கப் அமுக்கிரான் பொடி கலந்த தேநீர் குடிப்பதன் மூலம் இதயத்தில் தமனிகளில் ரத்தகுழாய் அடைப்புகள் உருவாவதை தடுக்க உதவுகிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை நிறைவாகவும் வேகமாகவும் அதிகரிக்க உதவுவதோடு இதயத்தை தாக்கும் நோய்களிலிருந்தும் காக்கிறது. இதயத்தை பாதுகாப்பாக வைக்கவும் உதவுகிறது.

மூட்டுகள், நரம்புகள்

30 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வீக்கம், மூட்டுகளில் வலி இதில் பாதிக்கப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் மூட்டில் உள்ள வலி குறைகிறது, என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் கீழ்வாதம், குடல் மற்றும் உடலின் செரிமான அமைப்பிற்கு நம் உடலில் உள்ள பீட்டா சத்தின் ஏற்றத்தாழ்வு மூலம் ஏற்படுகிறது. இந்த அஸ்வகந்தா விற்கு பீட்டா சத்தினை அதிகரிக்கும் உண்டு.
அமுக்கிரானை சுக்குடன் சேர்த்து வெந்நீர் கொண்டு அரைத்து பற்று போட்டு வந்தாலே வீக்கங்கள் குறையும். பசும்பாலில் இந்த பொடியை கலந்து குடித்துவந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும். உடல் தாதுவிருத்திக்கு பலம் கிடைக்கும் நரம்பு மண்டலத்தை


Share Tweet Send
0 Comments
Loading...