அற்புத மருத்துவ பயன்கள் கொண்ட திருநீற்று பச்சிலை

அற்புத மருத்துவ பயன்கள் கொண்ட திருநீற்று பச்சிலை

ரொம்ப நாளா உங்க வீட்ல வெச்சிருக்கிற செடிகள் சரியா வளராம இருக்கா? இல்ல பூச்செடிகள் சரியா பூக்காம இருக்கா? அப்படி இருநடதா இந்த திருநீற்றுப் பச்சிலை செடியில் இருந்து நான்கே நான்கு இலைகளை மட்டும் பறித்துக் கொண்டு போய், அந்த செடிகளுக்கு அருகில் வைத்தால், அப்புறம் பாருங்கள் செடிகள் எப்படி வளர்கிறது, எப்படி பூக்கிறது என்று

அவ்வளவு அற்புதங்கள் செய்யும் இந்த பச்சிலை பற்றி இன்னும் சில அற்புதங்களைப் பற்றி சொல்கிறோம். தெரிந்து கொள்ளுங்கள்.

திருநீற்றுப் பச்சிலை திருநீற்றுப் பச்சிலை மிகவும் வாசனை மிகுந்த தாவரம். இதனுடைய பிறப்பிடமே தெற்கு ஆசியாவிலுள்ள இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தான்.

மூலப்பொருள்கள் திருநீற்றுப் பச்சிலையில் மிக அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட், பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது. இதில் மிகக்குறைந்த கலோரிகளைக் கொண்டது. பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இதுமட்டுமல்லாது, சிட்ரால், சிட்ரோனெலால், ஜெரானியால், மெத்தில் ஈகிய ஏராளமான மூலப்பொருள்கள் இதற்குள் இருக்கின்றன.

பெயர்க் காரணம்: உருத்திரச்சடை, பச்சை சப்ஜா, திருநீற்றுப்பச்சை, விபூதிபச்சிலை, பச்சபத்திரி, திருநீத்துப்பத்திரி போன்ற வேறு பெயர்கள் இதற்கு உள்ளன. முற்காலங்களில் சில பகுதிகளில், திருநீறு தயாரிப்பில் இதன் சாம்பல் சேர்க்கப்பட்டதால் ‘திருநீற்றுப்’பச்சிலை எனும் பெயர் உருவாகியிருக்கலாம்.

அடையாளம்: தாவர செல்கள் தோறும் வாசனையை அழுத்தமாய்ப் பொதிந்து வைத்திருக்கும் சிறுசெடி வகை. அழகான வெள்ளை நிற மலர்களைக் கொண்டிருக்கும். ‘ஆஸிமம் பேசிலிகம்’ (Ocimum basilicum) எனும் தாவரவியல் பெயர்கொண்ட திருநீற்றுப் பச்சிலை, லாமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. லினாலூல் (Linalool), யுஜெனால் (Eugenol), ஜெரானியால் (Geraniol) ஆகிய தாவர வேதிப் பொருட்கள் இதில் இருக்கின்றன.

உணவாக: இனிப்புச் சுவையுடைய இதன் விதைகள், ‘சப்ஜா’ விதைகள் என்று பரவலாக அழைக்கப்படுகின்றன. இதன் விதைகளைச் சுமார் இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து சுவைமிக்க மருத்துவ பானத்தைத் தயாரிக்கலாம். வயிற்று வலி, கண் எரிச்சல், சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்போது, பனங்கற்கண்டு சேர்த்து சப்ஜா பானத்தைப் பருக, சுவையோடு விரைந்த நிவாரணமும் கிடைக்கும். மலத்தை வெளித்தள்ளும் செய்கை இந்தப் பானத்தின் ‘அசையும் சொத்து!’

இதன் இலைகளிலிருந்து சாறு எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட, கப நோய்கள் மறைவது மட்டுமன்றி செரிமானக் கோளாறுகள் சாந்தமடையும். சமையலில் சிறிதளவு இதன் சாற்றைச் சேர்த்து வர, வயிற்றிலுள்ள புழுக்கள் தெறித்து ஓடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் இலைகளை மற்ற கீரை வகைகளோடு சேர்த்துச் சமைக்க, உங்கள் கீரை மசியலுக்கு விசிறிகள் அதிகரிப்பார்கள்.

‘வாந்தி சுரமருசி நில்லா உருத்திரச்சடைக்கே உரை’ எனும் திருநீற்றுப்பச்சிலைக்கு உரிய அகத்தியர் குணவாகடப் பாடல், சுரம், வாந்தி, கப நோய்கள் போன்றவற்றுக்கு இதை முதன்மை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிவிக்கிறது.

கார்ப்புச் சுவையுடன் கூடிய இதன் இலைகளை உலரச் செய்து தேநீர் இலைகள் போல காய்ச்சிப் பருகலாம். சுரம் இருக்கும்போது, முழு தாவரத்தையும் நீரிலிட்டுக் கொதிக்கவைத்துப் பருக, வியர்வை வெளியேறி உடல் புத்துணர்வு அடைவதை உணர முடியும்.

மருந்தாக: இதற்கு இருக்கும் எதிர்-ஆக்ஸிகரணி செயல்பாடு குறித்த நிறைய ஆய்வுகள் இருக்கின்றன. வாத நோய்களுக்கான தீர்வாக இதிலிருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள் அமையும் என்கிறது ஓர் ஆய்வு. புற்றுநோய் செல்கள் வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வாசனையின் மூலம் பரவும் மருத்துவக் கூறுகள், நமது சுவாசப் பாதையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். இதன் விதைகளுக்கு வலி நிவாரணி செய்கையும் உண்டு. பிரசவத்துக்குப்பின் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த, இதன் விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன.

வீட்டு மருந்தாக: தலைவலி தடாலடியாகக் குணமாக, வலி நிவாரணி மாத்திரைகளைத் தேடுபவர்களுக்கான மாற்று திருநீற்றுப் பச்சிலை. இதன் இலைகளைப் பிரயத்தனப்பட்டு அரைக்க அவசியமில்லை. லேசாகக் கசக்கி முகர்ந்து பார்த்தால் போதும், தலைவலி மறையும். இதன் இலைச் சாற்றுடன் வசம்பைச் சேர்த்தரைத்து, முகப்பருக்களின் மீது தடவி வர, பவுர்ணமி சந்திரனாய் முகம் பிரகாசிக்கும்.

இதன் இலைகளையும் விதைகளையும் குளிக்கும் நீரில் அரை மணி நேரத்துக்கு முன்பே ஊறவைத்து, வாசனைமிக்க மூலிகைக் குளியலை மேற்கொள்ளலாம். சோப்பு, ஷாம்புகளின் துணையில்லாமலே உடலைத் தூய்மையடையச் செய்யும் குளியல் உத்தி இது.

வாய்க் கசப்பு இருக்கும்போது, இதன் இலை ஊறிய குடிநீரைக் கொண்டு வாய்கொப்பளிக்க, கசப்பு மறைந்து வாய் மணக்கும். இதன் இலைகளைக் கசக்கி உடலில் ஆங்காங்கே பூசிக்கொள்ள, கொசுக்கள் நம்மை நெருங்க அச்சப்படும். தேமல், படை போன்ற தோல் நோய்களுக்கு, இதன் இலைகளை வெளிப்பிரயோகமாகத் தொடர்ந்து பயன்படுத்த நல்ல பலனைக் கொடுக்கும். கொப்புளங்களின் மீது இதன் இலையை அரைத்துத் தடவ, அவற்றின் வீரியம் குறையும்.

மந்திரமாவது மட்டுமல்ல… மருந்தாவதும் ‘திருநீறு..!’

  • திருநீற்று பச்சிலை மூலிகை ரத்த வாந்தி, கப வாந்தி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. மேலும் இந்த மூலிகையை அரைத்து சாறு எடுத்து அதை சுடுநீரில் கலந்து குடித்தால் மிகவும் நல்லது.
  • முகத்தில் விஷப் பருக்கள் தோன்றினால் திருநீற்றுப் பச்சிலையில் சாறு எடுத்து அதில் வசம்பை வைத்து அரைத்து அதன் மீது தடவினால் போதும்.
  • தேள் கடித்த இடத்தில் இந்த மூலிகையில் சாற்றை ஊற்றி அதன் மீது இந்த இலையை வாய்த்து இறுக்கி காட்டினால் விஷம் இறங்கிவிடும். மேலும் வலியும் சரியாகிவிடும்.
  • திருநீற்று பச்சிலை சாற்றை கண்கட்டி மேல் தொடர்ந்து பூசி வர கட்டி சரியாகிடும். மேலும் காலில் ஆணி விழுந்துவிட்டால் இந்த மூலிகையை கசக்கி ஆணியுள்ள இடத்தில் வைத்து காட்டினாள் ஒரே வாரத்தில் சரியாகிவிடும்.
  • இந்த இலையை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் மூன்று நாட்களில் வாய்ப்புண் சரியாகிவிடும்.
  • இந்த இலையைக் கசக்கி முகர்ந்ர் பார்த்தால், தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகிவிடும். வாந்தியை நிறுத்துவதில் இது மிகச்சிறந்த மருந்து. குறிப்பாக, ரத்த வாந்தியைக் கூட கட்டப்படுத்தும்.
  • பேன் மற்றும் பொடுகு தலையில் பேன் மற்றும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இந்த இலையின் சாறை தனியாகவோ அல்லது எண்ணெயில் கலந்தோ தேய்த்து தலைக்குக் குளித்து வாருங்கள். பேன், பொடுகுத் தொல்லை போயே போயிடும்.
  • முகப்பருக்கள் பரு வயதுடையவர்களுக்கு முக்கிய பிரச்னையே இந்த பருக்கள் தான். குறிப்பாக, பெண்களுக்கு இதனால் உண்டாகும் தொல்லை மிக அதிகம். சிலர் பருவைப் போக்க ஏதாவது கெமிக்கல் நிறைந்த க்ரீம்களைப் போட்டு, முகத்தில் பரு இருந்த இடம் புண்ணாகிவிடுகிறது. கரும்புள்ளிகளும் வந்து விடுகின்றன. அத்தகைய பிரச்சினைகளுக்கு இந்த திருநீற்றுப் பச்சிலை மிகச் சிறந்த தீர்வாக அமையும். இந்த இலையை கைகளால் கசக்கி, அதனுடைய சாறினை முகத்தில் தடவினாலே போதும் பருக்கள் காணாமல் போய்விடும். அதன் தடமும் மறை்நது விடும்.
  • வயிற்றுப்பூச்சிகள் திருநீற்றுப் பச்சிலையின் விதைகளைத் தான் சியா விதைகள் என்ற பெயரில் விறகப்படுகின்றன. இதைத் தான் ஜிகர்தண்டா போன்ற குளிர் பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையது.
  • சிறுநீர் பெருக்கி சிறுநீர் பெருக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.


    பூமி, வாசனைமிக்கதொரு சூழல் இயக்கம்! இயற்கை படைத்த அனைத்து ஜீவன்களும் ஏதாவதொரு தனித்துவமான வாசனையை இந்தப் பூவுலகினுள் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. அதிலும் சில தாவர ஜீவன்களின் வாசம், நம்மை மெய் மறக்கச் செய்யும் இயல்புடையது.

Share Tweet Send
0 Comments
Loading...