அரிய கீரை வகைகளும் அற்புதமான மருத்துவ குணங்களும்!-பகுதி III

அரிய கீரை வகைகளும் அற்புதமான மருத்துவ குணங்களும்!-பகுதி III
தூதுவளை பயன்கள்

தூதுவளை இலையை சிறிய வெங்காயத்துடன் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு பின்பு மூன்று நாட்கள் விட்டு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக 21 நாட்கள் சாப்பிட சுவாசகாசம் நீங்கும்.

 • இலையை அரைத்து அத்துடன் சம அளவு பசு வெண்ணெய், பின்பு 10 கிராம் பொடித்த அரிசித் திப்பிலி, ஓமம், கடுக்காய்த் தோல் சேர்த்துக் கலக்கி சூடு செய்து பிழிந்து கிடைக்கும் நெய்யைத் தேக்கரண்டியளவு தொடர்ந்து 40 நாட்கள் உள்ளுக்குச் சாப்பிட ஷயரோகம் குணமாகும்.
 • தூதுவளைப் பூவை நெய்யில வதக்கி தயிருடன் சாப்பிட விந்து கட்டும், அறிவு விருத்தியாகும். தூதுவளை இலையைத் துவையல் செய்து சாப்பிட மாந்தம், தாது நஷ்டம், இளைப்பு இவைகள் போகும். பருப்புடன் சேர்த்து இதைக் குழம்பு வைத்துச் சாப்பிட மகோதரம் (பெருவயிற்றுநோய்), கர்ண சூலை இவை குணமாகும். தூதுவளை இலைச் சாற்றை காதில் பிழிய காதடைப்பு, காதெழுச்சி முதலிய நோய்கள் குணமாகும்.

ஆண்மை பெருகும், சரும  நோய்  குணமாகும் மற்றும் சளி  தொல்லை குணமாகும்.

தவசி கீரை பயன்கள்

இருமல் குணமாகும்.

மூக்கரட்டை கீரை(சாரண கீரை) பயன்கள்

இந்த கீரையில் ஏராளமான மருத்துவ வேதியியல் பொருட்கள் உள்ளன. உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, உடல் கழிவுகளை வெளியேற்ற இது உதவுகின்றது.

மூக்கிரட்டை இலையை உணவாகவோ, மருந்தாகவோ உட்கொண்டால் உடலில் உள்ள வாத நோய்கள் பெட்டியில் அடைபட்ட பாம்பை போல அடங்கி விடும்! இது உடலில் அதிகரிக்கும் வாதம், கபத்தை சீர்செய்யும் தன்மையும் கொண்டது.

ரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், பாத வீக்கம், மூச்சிறைப்பினை போக்க இதன் இலைகளை சமைத்து சாப்பிடவேண்டும். மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் நீர் தேங்கி வயிறு பெருத்துகாணப்படும். அதனை மூக்கிரட்டை குணப்படுத்தும்.

ஒவ்வாமை காரணமாக உடலில் நமைச்சல் உண்டாகும். அதற்கு மூக்கிரட்டையை பயன்படுத்தலாம்.

விழுத்திக் கீரை பயன்கள்

பசியை அதிகரிக்கும்.

கொடிகாசினிக் கீரை பயன்கள்

பித்தத்தை தணிக்கும்.

துத்திக் கீரை பயன்கள்

வாய்  மற்றும் வயிற்று புண்  குணமாகும்.வெள்ளை மூலம் விலகும்.

நருதாளி கீரை வகைகள் பயன்கள்

ஆண்மையை பெருக்கும், வாய்ப்புண் குணமாகும்

வாதநாராயணன் கீரை பயன்கள்
 • வாதக்கோளாறு உள்ளவர்கள், கை - கால் பிடிப்பு, சுளுக்கு உள்ளவர்கள் மற்றும் பொதுவாக எல்லோருமே வாதநாராயணன் இலையை சமைத்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் நன்றாக மலம் கழிவதோடு வாதநீர், துர்நீர் எல்லாம் வெளியேறும். மூட்டுவலி மற்றும் வாதக் கோளாறு உள்ளவர்கள் வாதநாராயணன் இலையுடன் முருங்கைக்கீரை, லெச்சக்கொட்டை கீரை எனப்படும் நச்சுக்கெட்ட கீரை சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும
ஓமவல்லி (கற்பூரவல்லி கீரை) பயன்கள்
 • கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.
 • வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
 • இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.
 • இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
 • இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
 • இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்
 • இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
 • கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
 • தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
 • மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
 • சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
 • குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள். இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.
சிறுகீரை பயன்கள்
 • இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து மிக அதிக அளவில் உள்ளன. 90 சதவிகிதம் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுச் சத்து ஆகியவையும் இதில் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் இதில் சம விகிதத்தில் கலந்துள்ளன.
 • சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும்.
 • சிறுகீரையுடன் துவரம்பருப்பும், வெங்காயம் சேர்த்து இந்தக் கீரையை நெய்யில் வதக்கிக் கடைந்து, தொடர்ச்சியாக 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும்.
 • குடல், இருதயம், மூளை, இரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இருதய வியாதிகள் நீங்கும்.
 • சிறுகீரை உடலுக்கு அழகையும், முகத்துக்குப் பொலிவையும் தரவல்லது.
கீழாநெல்லி பயன்கள்

மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும்.

கல்யாண முருங்கைக் கீரை பயன்கள்

கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது. இது கிராமப்புறங்களில் முள் முருங்கை,முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் குணங்கள் கொண்டது.

கல்யாண முருங்கையின் மருத்துவ பயன்கள்

1. கல்யாண முருங்கையில் சுண்ணாம்புச்சத்து, நார்சத்து, இரும்புசத்து அதிகம் உள்ளது.

2. கல்யாண முருங்கையானது கர்ப்பபை பிரச்சனைகளை சரிசெய்யும். கருச்சிதைவிலிருந்து சிசுவைக் காப்பாற்றும். பெண் மலட்டுத் தன்மையை நீக்கும்.

3. கல்யாண முருங்கையை பெண்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான வயிற்றுவலி மற்றும்  உதிரிப்போக்கை தடுக்கும்.

4. கல்யாண முருங்கை இலைச் சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும். அத்துடன் இந்த இலைச் சாற்றை குடித்தால், பொதுவாக நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும், பருத்த உடல் இளைக்கும்.

5. கல்யாண முருங்கையானது பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க உதவும்.

6. இந்த கீரையானது சிறுநீரகப் பிரச்சனையை சீர்செய்யும். சூடு மற்றும் பித்தநோய்களை கட்டுப்படுத்தும்.

7. கல்யாண முருங்கை இலையுடன் கசகசா, உளுந்து, மாதுளம்பழச் சாறு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், ஆண்மை பெருகும், தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு உறவில் ஆர்வம் ஏற்படும்.

8. கல்யாண முருங்கை காய்ச்சலை குறைக்கும், மேலும் உடலை வலுவாக்கும்.

9. கல்யாண முருங்கை இலை, முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு இவற்றை சூப்வைத்து குடித்தால் ரத்தசோகை குணமாகும்.

10. கல்யாண முருங்கை இலையுடன் மிளகு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் பனி மற்றும் மழை காலத்தில் சளித்தொல்லை இருக்காது.

11. கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் பின் குளித்தால் உடலில் ஏற்படும் தோல் நோய்களான சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

12. கல்யாண முருங்கை இலையுடன் ஒரு தேக்கரண்டி தண்ணீரில் ஊறவைத்த வெந்தயம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுத்தல், வெட்டை நோய்கள் குணமாகும்.

13. கல்யாண முருங்கை இலைகளை இலேசாக வதக்கி, இளஞ்சூட்டில் பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால் கீல்வாயு குணமாகும்.

இன்னும் பல கீரைவகைகள் உண்டுஎன்றாலும் கிடைக்கும் இந்த கீரை வகைகளைஅவ்வப்போது உணவில் சேர்த்து வந்தாலேபோதும். உடல் ஆரோக்கியம் நிச்சயம். இனி கீரையின்வாசம் உங்கள் இல்லத்தில் எல்லாநாளும் மணக்கட்டும்.


Share Tweet Send
0 Comments
Loading...