அபான முத்திரை

அபான முத்திரை

செய்முறை:

 1. நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில ஒரு விரிப்பு விரித்து அதில் பத்மாசனம் அல்லது வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
 2. உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
 3. கண்களை மூடி ஒரு நிமிடம் இருநாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
 4. பின் மோதிர விரல், நடு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு அழுத்தம் கொடுக்கவும்.
 5. மற்ற விரல்கள் நேராக இருக்கவும்.
 6. இந்த நிலையில் இரு கைகளையும் வைத்து பதினைந்து நிமிடங்கள் இருக்கலாம்.
 7. முதலில் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.
 8. பின் படிப்படியாக பத்து நிமிடங்கள்.
 9. பின்பு இரு மாதத்தில் பதினைந்து நிமிடங்கள் இருக்கலாம்.

பலன்கள்:

 1. மலச்சிக்கல் சரியாகும்.
 2. மூட்டு வாதம் மூட்டு வலி நீங்கும்.
 3. அஜீரண கோளாறு நீங்கும்.
 4. பசியின்மை தீரும்.
 5. வாயு சம்பந்தமான வியாதி குணமாகும்.
 6. கழுத்து வலி நீங்கும்.
 7. இருதய வலி குணமாகும்.
 8. மற்றும் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.

Share Tweet Send
0 Comments
Loading...