அனுசாசன முத்திரை

அனுசாசன முத்திரை

செய்முறை:

 1. விரிப்பில் கிழக்கு நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
 2. முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
 3. கண்களை மூடி மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியே விடவும்.
 4. ஒரு ஐந்து முறைகள் இவ்வாறு செய்யவும்.
 5. இப்போது ஆள்காட்டி விரலை வளைக்காமல் நேராக வைத்து கொண்டு, நடுவிரல் மோதிர விரலை சுண்டு விரல் ஆகியவற்றை பெருவிரலுடன் இணைத்து வைக்கவும்.
 6. இரு கைகளிலும் இது மாதிரி செய்யவும்.

பலன்கள்:

 1. ஒரு மண்டலம் தொடர்ந்து செய்து வந்தால் பஞ்ச பூதங்களும் உடலில் சரியாக இயங்கும்.
 2. ஐம்புலன்களும் அடங்கும்.
 3. மனம் ஒடுங்கும், மன அமைதி கிடைக்கும்.
 4. கழுத்து வலி நீங்கும்.
 5. தியானம் கைகூடும்.
 6. கழுத்து முதுகு வலி, நடு முதுகு வலி, அடிமுதுகு வலி நீங்கும்.

Share Tweet Send
0 Comments
Loading...