அன்னை பூபதி

அன்னை பூபதி

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்

அன்னை பூபதி அவர்களின் நினைவு நாள் ஈழத்தில் ஆண்டுதோறும் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளாக அனுசரிக்கப்படுகிறது. யார் இந்த அன்னை பூபதி?

 எங்களுக்கு ஆயுதப் போராட்டம் மட்டும் அல்ல. காந்தியவழி அகிம்சை போராட்டமும் தெரியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்கள் திலீபனும், அன்னை பூபதியும். 1932 நவம்பர் 3இல் பிறந்த அன்னை பூபதி அவர்களின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. அவர்களுக்கு பத்து குழந்தைகள். மட்டக்களப்பு- அம்பாறை பகுதியின் அன்னையர் முன்னணி செயல்பாட்டாளர். 1988இல் விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டு இருந்த நேரம், இந்திய அமைதி படைக்கு எதிராக அறவழிப் போராட்டம் நடத்த அன்னையர் முன்னணி முடிவு செய்தது. உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்னும் கோரிக்கையை முன் வைத்து அன்னையர் அமைப்புகள் ஒன்று கூடின. இதில் தமிழ் பெண்களும் பெருவாரியாக ஒன்றிணைந்து போராடதுவங்கினர். 1988 பிப்ரவரி 10இல் கொழும்பில் நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்படாததால், அன்னையர் முன்னணி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டது. 1988 மார்ச் 19இல் அன்னை பூபதி அவர்கள் முன் வந்து போராட்டத்தை துவக்கினார். முன்னெச்சரிக்கையாக "தான் சுய விருப்பதில் உண்ணாவிரதம் இருப்பதாகவும், தான் சுயநினைவு இழக்கும் பட்சத்தில் தனது கணவரோ பிள்ளைகளோ மருத்துவமனையில் சேர்க்கக் கூடாது எனவும் கடிதம் எழுதிவைத்துவிட்டு உண்ணா விரதம் தொடங்கினார். ஒரு மாதம் வெறும் நீர் மட்டுமே அருந்தி உண்ணா விரதம் தொடர்ந்தார். இதற்கிடையில் அன்னை பூபதியின் பிள்ளைகளை இந்திய ராணுவம் கைது செய்து மிரட்டியது. ஆயினும் அவர் பின் வாங்கவில்லை. இறுதியில் ஏப்ரல் 19 அன்று கொண்ட கொள்கையில் பின் வாங்காது உயிர் துறந்தார். அன்னையின் நினைவு நாளை ஆண்டுதோறும் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளாக கொண்டாடுகின்றனர்.


Share Tweet Send
0 Comments
Loading...