அமைச்சர் மனோ தங்கராஜூக்கு கரோனா

அமைச்சர் மனோ தங்கராஜூக்கு கரோனா

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜூக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருபவர் மனோ தங்கராஜ். இவருக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனோ தங்கராஜ், அண்மையில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார். ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

தற்போது அவர்களைத் தொடர்ந்து மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share Tweet Send
0 Comments
Loading...