வருண முத்திரை

வருண முத்திரை

வருண முத்திரை நிச்சயம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதுவரை மாத்திரை சாப்பிட்டவர்கள் உங்கள் கைமேல் நம்பிக்கை வைத்து முத்திரை செய்து சுகரை விரட்டுங்கள்.

வருண முத்திரையை எவ்வாறு செய்வது: பெருவிரலை வளைத்து, ஐந்தாவது விரலின் (சிறுவிரல்) நுனிப் பகுதியோடு இணையுங்கள். சுட்டு விரல், நடுவிரல், மோதிர விரல் மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.

அமரும் முறை: * பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம். ஆசனம் பற்றி தெரியாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்தும் (சுகாசனம்) செய்யலாம். கால்களை மடக்கி தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். எந்த நிலையில் அமர்ந்து செய்தாலும், கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும். கவனம் முழுவதும் செய்யும் முத்திரையின்மீது பதிந்திருக்கட்டும்.

எவ்வளவு நேரம்?: குறைந்தபட்சம் 24 நிமிடங்கள். காலையில் 12 நிமிடங்கள், மாலையில் 12 நிமிடங்கள் என பிரித்தும் செய்யலாம். உடற்சூடு மிக அதிகமாக உள்ளவர்கள் அதிகபட்சமாக 48 நிமிடங்கள் வரையிலும் (ஒரு நாளில்) செய்யலாம். ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்வது கடினமாக இருக்கும். காலையில் 16 நிமிடங்கள், மதியம் 16 நிமிடங்கள், மாலை அல்லது இரவில் 16 நிமிடங்கள் என மூன்று வேளையும் சேர்த்து 48 நிமிடங்கள் செய்யுங்கள்.

செய்வதால் என்ன பலன்?:

1. உடற் சூடு தணியும்

2. உடலில் நீர் எனும் பூதம் சமநிலையை அடையும்.

3. கோடையினால் உடலில் ஏற்படும் நீர் இழப்பு சரிசெய்யப்படும்.

4. வியர்க்குரு மறையும்.

5. சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கப்படும். கட்டிகள் இருந்தால் அவை விரைவில் மறையும்.

6. தோல் வறட்சி மறைந்து, தோல் மறைந்து, தோல் மினுமினுப்பாகும்.

7. தோலிலுள்ள சுருக்கங்கள் மறையும்.

8. இளமையான தோற்றம் உருவாகும்.

9. தாகம் தணியும்.

10. உடலில் ரத்த ஓட்டம் சீரடையும்.


Share Tweet Send
0 Comments
Loading...