ஆரஞ்சு பழத்தோல்

ஆரஞ்சு பழத்தோல்

ஆரஞ்சு பழத்தை யாருக்கு தான் பிடிக்காது. நாம் பழம் வாங்க வேண்டுமென்றாலே அதில் ஆரஞ்சு பழம் நிச்சயம் இடம் பெரும். ஆரஞ்சு பழத்தில் விட்டமின் C சத்து நிறைந்து உள்ளது. இதனுடைய தோலிலும் அதிக பயன்கள் உள்ளன.

சிலருக்கு தூசிகளால் முகம் களையிழந்து கறுத்து போய்விடும். அவர்கள் ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி காய வைத்து பின் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து தயிருடன் கலந்து முகத்துக்குப் பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

ஆரஞ்சுத் தோல் கிருமி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தொற்றுத் தன்மைகளை கொண்டுள்ளதால் உங்களுடைய எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த  சருமத்திற்கு நல்ல பலன் தரும்.ஆரஞ்சுத் தோலை வாரம் ஒரு முறை முகத்துக்கு போட்டு வர முகத்திற்கு பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பிக்கும்.

மிருதுவான சருமத்திற்கு வெளியில் செல்லும் முன் சன் பிளாக் கிரீமை தவாறாமல் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முக சருமம் பாதுகாக்கப்படும்.பலருக்கும் பிடித்த ஆரஞ்சு பழத்தை நாம் வெறும் சதையை மட்டும் சாப்பிட்டுவிட்டு தோலை எரிந்து விடுகிறோம். ஆனால் அந்த தோலினால் ஏற்படும் நன்மை என்னவென்பதே நம்மில் பலருக்கு தெரியாது.

வினிகரில் ஆரஞ்சு தோலை ஊற வைத்து அதைப் பயன்படுத்தினால் வாசனை நிறைந்த அதேசமயம் கெமிக்கல் அல்லாத துடைக்கும் லிக்விடாகப் பயன்படுத்தலாம். இந்தக் கலவையை ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி கிச்சன், கண்ணாடி பொருட்கள், மிக்ஸி என துடைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். துர்நாற்றம் வீசக்கூடிய இடத்தில் ஆரஞ்சு தோலை வைத்தால் துர்நாற்றம் நீங்கும்.

பனிக்காலத்தில் குளிர் காய்ந்தாலோ அல்லது சாம்பிராணி புகை போடும்போதும் அதில் ஆரஞ்சு தோலை போட்டால் வீடெங்கும் நல்ல நறுமணம் கிடைக்கும். ஆடைகளில் ஏற்படும் கறைகள், உதாரணத்திற்கு பிசுபிசுப்பு தன்மை வாய்ந்த கறை, ஆயில் கறை, கிரீஸ் போன்ற கறைகள் இருந்தால் சோப்பு பவுடருடன் ஆரஞ்சு தோலையும் ஊறவைத்து துவைத்தல் கறை நீங்கும். கண்ணாடி பொருட்கள் மீதுள்ள பிசுக்குகளை நீக்கவும் ஆரஞ்சு தோலை தேய்க்கலாம்.

ஆரஞ்சு தோலை பவுடராக்கி அதில் தேன் மற்றும் தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்தால் முகம் வெள்ளையாக மாறும், இந்த மாற்றத்தை நீங்கள் நன்றாகவே பார்க்கலாம். பொடுகு தொல்லை இருப்பவர்கள் ஆரஞ்சு தோலை இரவு ஊற வைத்து அந்த தண்ணீரை தலையில் தேய்த்து குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும்.


Share Tweet Send
0 Comments
Loading...