9 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி

9 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

9 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தி.மு.க. தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின், பல்வேறு ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே, சென்னை காவல் ஆணையர், உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, தற்போது தமிழக காவல் துறையில், 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவலர் பயிற்சி மைய கல்லூரியின், டி.ஜி.பி.,யாக இருந்து வந்த ஷகீல் அக்தர், சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி.,யாகவும், சிறப்பு டி.ஜி.பி. தலைமையிடம் பொறுப்பில் இருந்து வந்த கந்தசாமி, லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி.,யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல, ஈரோடு சிறப்பு அதிரடி படை கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ரவி, நிர்வாகம் கூடுதல் டி.ஜி.பி.,யாகவும், ஐ.ஜி., உளவுத் துறையாக பொறுப்பு வகித்த ஈஸ்வர மூர்த்தி, உள்நாட்டு பாதுகாப்பு உளவுத் துறை ஐ.ஜி.,யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்து வந்த திருநாவுக்கரசு, எஸ்.பி.சி.ஐ.டி விங்க் 1 எஸ்.பி.,யாகவும், நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக இருந்த சாமிநாதன், எஸ்.பி.சி.ஐ.டி விங்க் 2 எஸ்.பி.,யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், அரவிந்தன் ஐ.பி.எஸ், எஸ்.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,யாகவும், சரவணன் ஐ.பி.எஸ்., ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு எஸ்.பி.,யாகவும், ஆசியம்மாள் ஐ.பி.எஸ்., உளவுத் துறை டி.ஐ.ஜி.,யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Share Tweet Send
0 Comments
Loading...