உன்னத உணவுப் பழக்கம்!

உன்னத உணவுப் பழக்கம்!

உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1 . அருந்துதல் — மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

2 . உண்ணல் — பசி தீர சாப்பிடுவது.

3 . உறிஞ்சுதல் — நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.

4 . குடித்தல் — நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.

5 . தின்றல் — பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.

6 . துய்த்தல் — உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

7 . நக்கல் — நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.

8 . பருகல் — நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

9 . மாந்தல் — ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.

10 . கடித்தல் — கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.

11. விழுங்கல் — வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

12. முழுங்கல் — முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது


Share Tweet Send
0 Comments
Loading...